பெங்களூருவில் பிறந்து, மாடலிங் துறையில் நுழைந்து தற்போது பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்பவர், அனுஷ்கா சர்மா.
2006ஆம் ஆண்டு ஷாருக்கானுடன் ராப் நே பனா டி ஜோடி என்ற படத்தில் நாயகியாக நடித்து தனது திரை வாழ்க்கையை தொடங்கினார்.
இப்போது இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார்களாக விளங்கும் சல்மான் கான், ரன்வீர் சிங், வருண் தவான் உள்ளிட்ட பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். கடந்த ஆண்டு குவாலா எனும் படத்தில் காமியோ ரோலில் வந்த இவர், அதையடுத்து இன்னொரு படத்தில் நடித்து வருகிறார்.
2018ஆம் ஆண்டு வரை தொடர்ந்து படங்களில் நடித்துக்காெண்டிருந்த அனுஷ்கா இப்போது ஆண்டிற்கு ஒரு படம்தான் நடித்துவருகிறார். தாய்மை அடைந்த பிறகு குடும்பத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் இனி தனது குழந்தையுடன் சேர்ந்து நேரம் செலவிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் வெள்ளை நிற ரோஜாப்பூ போன்ற ஆடையில் ஜொலிக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகின்றன.
Listen News!