திரையுலகில் முக்கிய நடிகையாக திகழ்ந்த அனுஷ்கா தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘ரெண்டு’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். இவருக்கு தமிழில் மட்டுமன்றி தெலுங்கிலும் ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு.
அறிமுக படைத்தத் தொடர்ந்து இவர் நடிப்பில் பல படங்கள் வெளியாகி இருந்தன. எனினும் அவற்றுள் பாகுபலி, அருந்ததி, பஞ்சமுகி, சிங்கம் 2, சிங்கம் 3 உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக மாறி வெற்றி பெற்றன.
இவர் தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரங்களாக உள்ள விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்து வைத்திருந்தார். அது மட்டுமல்லாது அவருடைய உயரமும், அழகும் ரசிகர்களை வெகுவாக கவர பட வாய்ப்புகளும் வந்து குவிந்த வண்ணமே இருந்தன.
இவர் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தன் உடல் எடையை கூட்டினார். அதன் பின்னர் அதனை குறைக்க முடியாமல் திணறினார்.
அப்போது இருந்து அனுஷ்காவின் உடல் எடை பற்றி பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. அவர் எடையை குறைக்க சிகிச்சை எடுத்துக்கொள்கிறார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் அவர் ஒல்லியானது போல தெரியவில்லை.
மேலும் இதன் காரணமாகவே அனுஷ்கா பொது இடங்களுக்கு வருவதையும் தவிர்த்தார். அத்தோடு படங்கள் நடிப்பதையும் நிறுத்திவிட்டார்.
இந்நிலையில் தற்போது ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா. அவரது 48வது படமான இதற்காக ஒரு ரிஸ்க் எடுக்கிறார் என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
அனுஷ்கா இந்த படத்திற்காக மீண்டும் உடல் எடையை கூட்டி இருப்பதாகவும், அதனால் தான் அவர் சமீப காலமாக வெளியில் வருவதில்லையாம்.
அத்தோடு அவரது போட்டோ வெளியில் வர கூடாது என்பதற்காக அதிகம் கெடுபிடி உடன் தான் ஷூட்டிங் நடக்கிறது.
பிற செய்திகள்
- விக்னேஷ் சிவனை வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினி-இது தான் விசயமா..?
- திரும்பவும் வீட்டுக்கு வந்த பாக்கியா.. ஷாக்கான கோபி-இன்றைய முழு எபிசோட் அப்டேட்
- போனிகபூர் பட ஷூட்டிங்கிற்காக போடப்பட்ட செட்டில் ஏற்பட்ட தீ- ஒருவர் பலி..!
- செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் குரலால் மிரட்டிய கமல்ஹாசன்… வைரலாகும் வீடியோ..!
- பிரபல இயக்குநருடன் மீண்டும் இணையும் விக்ரம்..!!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!