• Sep 20 2024

“எங்கேயும் எப்போதும் எதுவேண்டுமானாலும் செய்யலாம்”- படப்பிடிப்புத் தளத்திலும் முரட்டுத்தனமாக பயிற்சி செய்யும் சூரி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு என்ற திரைப்படத்தின் மூலம் சிறந்த காமெடியனாக அறியப்பட்டவர் தான் சூரி. இப்படத்தைத் தொடர்ந்து ரஜினி ,அஜித், விஜய், விஷால், சூர்யா ,கார்த்தி ,சிவகார்த்திகேயன் எனப் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்பொழுது கதாநாயகனாக விடுதலை என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இந்தப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி வருவதோடு விஜய் சேதுபதியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.இப்போது வரை 60 சதவீதம் படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ளதாம்.

இந்நிலையில் தற்போது கடைசி கட்ட ஷூட்டிங் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதிகளில் நடந்து வருகிறது. இந்நிலையில் காட்டுப்பகுதிகளில் நடப்பதால் வன விலங்குகள் மற்றும் பூச்சிகள் ஆகியவற்றின் தாக்குதல் இருக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக ஆம்புலன்ஸோடு படப்பிடிப்பை நடத்துவதாக சொல்லப்படுகிறது.

முன்னதாக படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகின . அந்த வகையில் நடிகர் சூரி தற்போது பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் வீடியோவில் விடுதலை படப்பிடிப்புத் தளத்திலேயே உடல் பயிற்சிகளை செய்துள்ளார். அந்த வீடியோவோடு மேலும் “எங்கேயும் எப்போதும் எதுவேண்டுமானாலும் செய்யலாம்” என கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement