• Sep 20 2024

“எந்த விசயம் ரசிகர்களுக்கு தெரியக்கூடாது என்று நினைத்தேனோஅது தெரிந்து விட்டது…” ; லோகேஷ் கனகராஜ்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் விக்ரம்.

இவ்வாறுஇருக்கையில் விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. அதில் நடிகர்கள் சிம்பு, உதயநிதி போன்றவர்கள் கலந்துகொண்டார்கள். மேலும் சூர்யா மற்றும் விஜய் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் கலந்துகொள்ளாதது அவர்களது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாகவே அமைந்தது என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக பல தகவல்கள் வெளியான. இந்த தகவல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியது. இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் இதை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உறுதிப்படுத்தினார்.

அவர் பேசுகையில் விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இந்த தகவலை நான் படம் வெளியானபிறகு ரசிகர்களுக்கு தெரியவந்தால் சர்ப்ரைஸாக இருக்குமென்று நினைத்தேன். ஆனால் படம் வெளியாவதற்கு முன்பே இந்த தகவல் கசிந்துவிட்டது.

மேலும் இந்த தகவல் படம் வெளியாவதற்கு முன்பு தெரியக்கூடாது என்று தான் இருந்தேன் என்றார் லோகேஷ் கனகராஜ். மேலும் பேசிய கமல், தம்பி சூர்யா நாங்கள் கேட்டவுடன் பிஸியான நேரங்களிலும் வந்து நடித்து கொடுத்தார். அதற்காக அவருக்கு நன்றிகள் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/XNvSpgoJYqg

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement