• Nov 10 2024

அபர்ணா பாலமுரளியிடம் அத்து மீறிய மாணவன்.. கல்லூரி நிர்வாகம் கொடுத்த தக்க தண்டனை..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் பிரபல நடிகையாகத் திகழ்ந்து வருபவர் அபர்ணா பாலமுரளி. இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான '8 தோட்டாக்கள்' படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் பிரமாண்டமாக வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மென்மேலும் பிரபலமானார்.


அந்தவகையில் அப்படத்தில் இவர் பொம்மி என்கிற கதாபாத்திரத்தில் மதுரைக்கார பெண்ணாக துணிச்சல் மிகுந்த வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்ததோடு மட்டுமல்லாமல் அதனை அங்கீகரிக்கும் விதமாக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் இவர் வென்றார்.


இதனையடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை அதிகளவில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அபர்ணா. இந்நிலையில் இவர் தற்போது 'தன்கம்' என்ற மலையாள படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படமானது வருகிற ஜனவரி 26-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. 

சஹீத் அராபத் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் வினீத் ஸ்ரீனிவாசனுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 


அந்த வகையில் இப்படத்தின் உடைய புரமோஷனுக்காக கேரளாவில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றில் படக்குழுவினர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். அப்போது மேடையில் அமர்ந்திருந்த அபர்ணா பாலமுரளியிடம் வந்த கல்லூரி மாணவர் ஒருவர், அவருக்கு பூ கொடுத்துவிட்டு, சட்டென அவரது கையை பிடித்துள்ளார். 

அதுமட்டுமல்லாது பின்னர் அவருடன் போட்டோ எடுப்பதற்காக எழுந்தபோது அந்த மாணவர் தோல்மீது கையை போட்டதை சற்றும் விரும்பாத அபர்ணா, அவரின் பிடியில் இருந்து நழுவி மீண்டும் தனது இருக்கையில் சென்று அரங்கத்தில் அமர்ந்தார். 


இதனைத் தொடர்ந்து மீண்டும் மேடை ஏறி வந்த அந்த மாணவர் மீண்டும் அபர்ணாவுக்கு கைகொடுக்க முயன்றார். அந்த சமயத்தில் அந்த மாணவனுக்கு கைகொடுக்க மறுத்துள்ளார் அபர்ணா பாலமுரளி. இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு இருந்தது.

அதுமட்டுமல்லாது மாணவனின் செயலைக் கண்டித்துப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து இருந்தனர். இதனையடுத்து தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள நடிகை அபர்ணா பாலமுரளி, பெண்ணின் அனுமதி இன்றி தொடக்கூடாது என்பது சட்ட கல்லூரி மாணவருக்கு அந்தளவிற்கு தெரியாதா, என கேள்வி எழுப்பி அந்த மாணவரினுடைய செயலுக்கு தன்னுடைய கண்டனத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் தற்போது அந்த மாணவனை எர்ணாகுளம் சட்ட கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து தக்க தண்டனை கொடுத்துள்ளது. மேலும் அந்த மாணவர் பெயர் விஷ்ணு என்பதும் அவர் இரண்டாம் ஆண்டு மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement