• Sep 20 2024

முழு உடைக்குத் தாவிய அபர்ணா பாலமுரளி... அதுவும் ரெட் கலரிலேயா.. இது இவங்க லிஸ்ட்டிலேயே இல்லையே..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்தியத் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை அபர்ணா பாலமுரளி. இவர் நடிகை மட்டுமல்லாது பின்னணிப் பாடகியாகவும் இருந்து வருகின்றார். குறிப்பாக இவர் 2016-ஆம் ஆண்டே திரையுலகுக்குள் அறிமுகமாகி இருந்தார்.



மலையாள சினிமா நடிகையான இவர் தமில் சினிமாவிலும் நடிக்காத தொடங்கினர். அதிலும் 'சூரரைப் போற்று' என்னும் படத்தின் மூலம் பல ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்து பிரபலமடைந்தார். அதற்கு முன்னதாக 'எட்டு தோட்டாக்கள்' என்ற படத்திலும் நடித்திருந்தார். 



அதனைத் தொடர்ந்து மலையாள சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்த அபர்ணா 'சூரரைப்போற்று' படம் மூலம் ஃபேன் இந்தியா நாயகியாக மாறிவிட்டார். நடிகர் சூர்யா முக்கிய ரோலில் நடித்திருந்த இந்த படம் தேசிய விருதை சமீபத்தில் பெற்றிருந்தமை யாவரும் அறிந்த ஒன்றே.



அப்படத்திற்கு மட்டுமன்றி அப்படத்தில் நடித்திருந்த அபர்ணா பாலமுரளிக்கும் சிறந்த நாயகிகளுக்கான விருது கிடைத்தது. அதுமட்டுமல்லாது தற்போது ஆர்.ஜே பாலாஜி முக்கிய ரோலில் நடித்திருந்த 'வீட்ல விசேஷம்' என்ற படத்திலும் நாயகியாக இவரே தோன்றியிருந்தார். அதுமட்டுமல்லாது ஜீ.வி பிரகாஷ் குமார் நடித்த 'சர்வம் தாள மயம்' திரைப்படத்தில்  கதாநாயகியாக  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் . 



இவ்வாறாக எத்தனை படங்கள் நடித்திருந்தாலும் 'சூர்யாவின் சூரரை போற்று' படம் தன் வாழ்வில் மறக்க முடியாது எனக் கூறியிருந்தார். காரணம் அப்படத்தில் அவரது பாத்திரத்திற்காக நிறைய பாராட்டுகளைப் பெற்றுள்ளார். அடுத்த தமிழ்த் திரைப்படமான தீதும் நான்றும் படத்தில் நடித்திருந்தார்.


தற்போது இவரின் கைவசம் 'சுந்தரி கார்டன், ஆகாசம், உலா கார்த்திக்குடன் ஒரு படம் ,பத்மினி, உன்னி முகுந்தனுடன் ஒரு படம்' என பல படங்கள் இருக்கின்றன.ஒரு சில படங்களில் மட்டுமே அபர்ணா பாலமுரளி தோன்றியிருந்தாலும் பல விருதுகளையும் தன்னுடைய சிறந்த நடிப்பினால் பெற்றிருக்கின்றார்.



அபர்ணா பாலமுரளி படங்களில் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருப்பவர். தொடர்ந்து தன் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். எனினும் அவர் வழக்கமாக கவர்ச்சியாகவே புகைப்படங்களை பதிவிட்டு வருவார். ஆனால் தற்போது குடும்ப குத்து விளக்கு போல் மாறியிருக்கின்றார்.


அந்த வகையில் தற்போது ரெட் கலரில் முழு உடை அணிந்து ரசிகர்களை வசீகரித்து இருக்கின்றார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தமது லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement