• Sep 20 2024

கவினுடன் ஜோடி சேரும் அபர்ணா தாஸ்- ‘டாடா’ படத்தின் சூப்பர் அப்டேட்!

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபல்யமானவர் தான் கவின்.இவர் இதனைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்குபற்றினாலும் பிக்பாஸ் சீசன் 3இல் கலந்து கொண்டதன் மூலமே மிகவும் பிரபல்யமானார்.


இதனை அடுத்து படவாய்ப்புக்களைப் பெற்று வரும் இவர் நட்புன்னா என்னான்னு தெரியுமா?, லிஃப்ட் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து கவனம் ஈர்த்துள்ளார்.அதிலும் லிஃப்ட்'திரைப்படத்தின் மூலம் இவருக்கு செம்ம ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.


இதனை அடுத்து 'டாடா என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 


 கணேஷ் பாபு இயக்கத்தில் உருவாகும் டாடா படத்தில், கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் பட புகழ் அபர்ணா தாஸ் நடித்துள்ளார். மேலும், விடிவி கணேஷ் ஐஸ்வர்யா பாஸ்கரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

'டாடா' படத்தில் இடம்பெற்ற 'மகனே என் கண்மணி' என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த டாடா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.


 இதனை படத்தின் ஹீரோ கவின் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், இறுதியாக எடுக்கப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களையும் தனது டுவீட்டரில் ஷேர் செய்துள்ளார். டாடா திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement