• Nov 14 2024

ஏ.ஆர்.ரஹ்மானே மன்னிப்புக் கேட்டு விட்டார்,நீங்க எதுக்கு கூஜா தூக்குகிறீங்க- ஆதரவாகப் பேசியவர்களை கழுவி ஊற்றும் ப்ளூ சட்டை மாறன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் 30 வருடங்களுக்கு மேலாக இசைத் துறையில் பல சாதனைகள் புரிந்த இசையமைப்பாளர் தான் ஏ.ஆர். ரஹ்மான்.இவரது ஏற்பாட்டில் மறக்குமா நெஞ்சம் என்ற கான்செர்ட் நிகழ்ச்சி  நேற்று முன் தினம் நிகழ்ச்சி நடந்தது. ஏற்கனவே ஆகஸ்ட் மாத நிகழ்ச்சிக்கு வாங்கிய டிக்கெட்டுகள் இதற்கும் செல்லும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் புதிய டிக்கெட்டுகளும் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

 இதனால் 25,000 பேர்வரை கான்செர்ட்டுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 50,000 பேர் வரை வந்து விட்டார்கள். இதன் காரணமாக பல ரசிகர்கள் நிகழ்ச்சி நடந்த மைதானத்துக்குள்ளேயே போக முடியாமல் திணறியுள்ளனர்.இந்த விவகாரம் குறித்து அமைதி காத்து வந்த ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் தளத்தில் ரசிகர்களின் டிக்கெட்டுகளுக்கான பணம் திருப்பி கொடுக்கப்படும் என்று கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நானே பலி ஆடு ஆகிறேன் என கூறியிருந்தார். 


இதனால் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, நடிகர் கார்த்தி, நடிகை குஷ்பூ உள்ளிட்டோர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக பேசியிருந்தனர். அதேபோல் இயக்குநர் தங்கர்பச்சான் தனது எக்ஸ் தளத்தில், "ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் அலைக்கழிக்கப்பட்டிருக்கும் மக்கள் கட்டுக்கடங்காத கோபத்தில் கிளர்ந்து எழுவதைக் காண முடிகிறது. 

இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் இந்த ட்வீட்டை பகிர்ந்து, "மறக்குமா நெஞ்சம்' கொடுமைகள் பற்றி பல்வேறு வீடியோக்கள் ஆதாரத்துடன் வெளிவந்தன. பெண்கள், முதியவர்கள் உட்பட பலரும் தாங்கள் கடும் இன்னலுக்கு ஆளானதை கூறினர். ஆனால் திரைத்துறையை சார்ந்த சிலர் அதைப்பற்றி பேசாமல் ரஹ்மானுக்கு கூஜா தூக்குகிறார்கள்.


 இதை அவரே விரும்ப மாட்டார். தவறுக்கு தானும் பொறுப்பென நேற்றே கூறிவிட்டார். நீங்கள் ஏன் முரட்டு முட்டு தருகிறீர்கள்? நீங்கள் எத்தனை போராட்டம்: இப்படி பேசினால்.. அவர் உங்கள் படத்தில் இசையமைப்பார் என ஏதேனும் கணக்கு போடுகிறீர்களா? ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் உள்ளிட்ட போராட்டங்களில் பங்கேற்றது அமேசான் வாழ் அரிய வகை மக்களா அல்லது நிலாவில் வாழும் குடிமக்களா? தமிழர்கள்தானே? நீங்கள் மக்களுக்காக எத்தனை போராட்டங்கள் நடத்தி.. தீர்வினை பெற்று தந்துள்ளீர்கள்? பெரும்பாலும் ஏசி அறையில்.. மைக் முன்பு பொங்குவதோடு சரி. 

இதனால்தான் பல ஆண்டுகளாக உங்கள் படங்கள் அனைத்தையும் மக்கள் புறக்கணித்து வருகிறார்கள் போல. உங்கள் வீராவேச உபதேசங்களை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேசாதவர்களின் படங்களை பார்க்காமல் ஒதுக்கித்தள்ளுங்கள் மக்களே" என குறிப்பிட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement