கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில், அரவிந்த் சாமி மற்றும் மதுபாலா நடிப்பில் வெளியாகி இருந்த 'ரோஜா' திரைப்படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனவர் ஏ.ஆர். ரஹ்மான். முதல் படத்திலேயே சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான், தொடர்ந்து இசைப்புயலாக திரையுலகை கலக்கி வருகிறார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்து வேகமாக நகர்ந்து சென்ற ஏ.ஆர். ரஹ்மான், ஹாலிவுட் வரைக்கும் சென்று ஆஸ்கர் விருதினையும் வென்றதுடன் இந்தியாவிற்கே பெருமை சேர்த்திருந்தார். இசை அமைப்பாளராக அறிமுகமாகி 30 ஆண்டுகள் கடந்த போதிலும் தொடர்ந்து தனது இசையால் ரசிகர்களை கட்டி போட்டும் வருகிறார்.
இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் குடும்பத்தில் இருந்து ஏற்கனவே ஜி.வி பிரகாஷ், ஏ.ஆர். அமீன் உள்ளிட்டோர் இசை உலகளவில் பயணித்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல் ஏ.ஆர்.ரகுமானின் மூத்த மகளான கதீஜா ரகுமானும் எந்திரன், செல்வன் 2 எனப் பல ஹிட் படங்களில் பாடி இருக்கிறார்.
இந்நிலையில் கஜீதா இசையில் புது அவதாரம் எடுக்கவுள்ளார். அதாவது தமிழில் வெளிவரவிருக்கும் மின்மினி எனும் திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக இவர் பணிபுரிந்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் அப்பாவைத் தொடர்ந்து இசையமைப்பாளராக அறிமுகமாகும் மகளிற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
So happy to be working with this exceptional talent, Khatija Rahman for #MinMini. The euphonious singer is a brilliant music composer too. Some great music underway! ✨✨@RahmanKhatija @manojdft @Muralikris1001 @_estheranil_ @GauravKaalai @Pravin10kishore @raymondcrasta pic.twitter.com/b9k1YjuxtU
Listen News!