திரைப்பட நடிகர் மட்டுமல்லாது திரைப்பட தயாரிப்பாளர், பின்னணி பாடகர் மற்றும் குரல் நடிகர் என பன்முகத் திறமை கொண்டு விளங்குகின்ற ஒருவரே நடிகர் விக்ரம். இவர் தமிழ் சினிமாவில் ‘சேது, விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமி, பிதாமகன்’ போன்ற பல படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார். அதுமட்டுமன்றி பல திரைப்பட விருதுகளையும் வென்று இருக்கின்றார். அத்தோடு இவர் தொடர்ந்தும் சினிமாவிலேயே கவனம் செலுத்தி வருகின்றார்.
இந்நிலையில் தற்போது இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படமே ‘கோப்ரா’. இந்தப் படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி செட்டி நடித்திருக்கின்றார். மேலும் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் என்பவரும் முக்கியமான ஒரு வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் யாவும் முடிவடைந்த நிலையில் படத்தினுடைய சிங்கிள் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது.
இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் இசையில் உருவான இந்தப் பாடலை முதல் தடவை கேட்கும்போதே மனம் கொள்ளை போகும் அளவிற்கு அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் பா.விஜய்யின் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை வாகு மசான் என்பவர் பாடியுள்ளார். இந்த பாடலின் வீடியோ வெளியாகி இணையதளங்களில் பயங்கர வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
விக்ரம், இர்பான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் உயிர் உருகுதே என்ற பாடல் நாளை வெளியாக உள்ளதாக சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்த வீடியோவில் வெளியாகியுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
பிற செய்திகள்
- பிரபல இளம் நடிகர் புற்றுநோயால் திடீர் மரணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
- இந்த நடிகருடன் நடிப்பதே என்னுடைய ஆசை.. பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஓபன் டாக்
- லாகவா லாரன்ஸ் நடிப்பில் ருத்ரன்- நியூ லுக்குடன் வெளியான ரிலீஸ் டேட் -குஷியில் ரசிகர்கள்..!
- அடுத்த சிவகார்த்திகேயன் இவர்தான்: நடிகர் பார்த்திபனே கூறிய விடயம்..!
- குக் வித் கோமாளி 3யின் முதல் பைனலிஸ்ட் இவர் தான்..வெளியானது தகவல்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!