தமிழ் மொழியில் ஒளிபரப்பாகும் பிரபல சேனல்களில் ஒன்று விஜய் டீவி. சாதாரண மக்களைக் கூட பிரபலங்களாக மாற்றிய பெருமை இவர்களையே சாரும். திறமை இருந்தும் அதனை வெளிப்படுத்துவதற்கு உகந்த வாய்ப்பு இல்லாமல் அலைகின்ற கலைஞர்களுக்கு ஒரு உந்து சக்தியாக இந்த சேனல் விளங்குகின்றது.
இந்த டீவி ஆனது பாடகர்கள், நடனக் கலைஞர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள், நடிகர்கள், நடிகைகள் எனப் பலரையும் வளர்த்து விட்டிருக்கின்றது. இவ்வாறான விஜய் டீவியில் ஸ்டாண்டப் காமெடியர்களில் ஒருவராக இருந்து வருபவர் அறந்தாங்கி நிஷா. இந்த சேனலில் இடம்பெறுகின்ற பெரும்பாலான காமெடி ஷோக்களில் அவரை பார்த்துவிடலாம்.
அதுமட்டுமல்லாது அவர் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பேச்சாளராக பங்கு பற்றி வருகிறார். அத்தோடு அதே சேனலில் ஒளிபரப்பாகின்ற பிரபல நிகழச்சியான பிக்பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டடிருக்கின்றார். அதில் அவர் 70 நாட்கள் அவரை தாக்குப்பிடித்தார்.
அதனைத் தொடர்ந்து இன்றுவரை வழக்கம் போல அவர் விஜய் டீவி ஷோக்களில் பங்கேற்று வருகிறார். அத்தோடு தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'திருச்சிற்றம்பலம்' என்ற படத்திலும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் இவர் இப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புக் கொடுத்த தனுஷ் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டிருக்கின்றார். இப்பதிவானது தற்போது வைரலாகி வருகின்றது.
Listen News!