அறந்தாங்கி நிஷா கலக்க போவது யாரு எனும் நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் அறிமுகமானார். மேலும் அதில் இவரது நகைச்சுவை பேச்சு மக்களை மட்டுமல்லாமல் இளைஞர்களையும் கவர்ந்தது.
மேலும் அதனை தொடர்ந்து தனது நகைச்சுவை திறமை மூலம் விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் நிஷா பங்கேற்றார். அதன் அடுத்தக்கட்டமாக தற்போது வெள்ளித்திரையிலும் நிஷா நடிக்க ஆரம்பித்து விட்டார்.
அந்தவகையில் நாளை வெளியாகவுள்ள ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்திலும் நடித்துள்ளார். இதனை முன்னிட்டு சமீபத்தில் ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் வீடியோ வெளியாகி இருந்தது. அதில் அறந்தாங்கி நிஷாவின் உடைய பெயரும் இடம்பெற்று இருந்தது.
இதனைத் தொடர்ந்து அறந்தாங்கி நிஷா சந்தோஷத்தில் பதிவொன்றினை வெளியிட்டிருக்கின்றார். இப்பதிவில் அவர் குறிப்பிடுகையில் "ரொம்ப நன்றி Nelson sir, இந்த இடத்துல என்னோட பேர் இருக்கிறது பார்க்கிறதுக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, அறந்தாங்கியில் இருந்து நான் திரை உலகத்துக்கு போகும்போது என்ன நம்புன என்னோட நண்பர்களுக்கும், என் குடும்பத்துக்கும் நன்றி, எனக்கு எப்பவுமே என்னோட ஊர் பிடிக்கும் இந்த இடத்தில் அறந்தாங்கி நிஷா என்று பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு,
ஒரு கிராமத்தில் இருந்து கிளம்பும்போது நிறைய விமர்சனங்கள் இப்ப வரைக்கும் அது வந்துட்டு தான் இருக்கு, ஆனா ஒன்னு மட்டும் நம்ம எந்த இடத்துக்கு வேணாலும் போலாம் ஆனால் அந்த துறைய நம்ம உண்மையா காதலிக்கணும் அப்படி காதலிச்சா கண்டிப்பா நமக்கு நல்லதே நடக்கும் நம்ம வேலைக்கு நம்ம உண்மையா இருந்தா நம்ம வேலை நம்மள கண்டிப்பா நல்லா பாத்துக்கும்,
எப்பவுமே என் கூட நிக்கிற என்னுடைய ஊர் நண்பர்கள், திரையுலக நண்பர்கள், என்னோட குடும்பம் ,என்னுடைய பட்டிமன்ற நண்பர்கள், என்னுடைய சமூக வலைதள நண்பர்கள், எல்லாருக்கும் நன்றி அப்புறம் முக்கியமா என்ன விமர்சனம் செய்ற அத்தனை நண்பர்களுக்கும் நன்றி" எனவும் பதிவிட்டுள்ளார்.
Listen News!