• Sep 20 2024

தனி ஒருவன் 2 படத்தின் ப்ரோமோ வீடியோவைப் பார்த்து மிரண்டு போன அரவிந்த்சுவாமி- என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி நடிப்பில் உருவானப் படம் தனி ஒருவன். கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

மேலும், இப்படத்தில் ஹரிஷ் உத்தமன், கனேஷ் வெங்கட் ராமன், தம்பி ராமையா, நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருந்த இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.


இப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகுவது குறிதது இயக்குநர் மோகன் ராஜா அண்மையில் ஒரு ப்ரோமோ வீடிாய வெளியிட்டிருந்தார்.அதில இந்த முறை ஜெயம் ரவி வில்லனைத் தேடி போக மாட்டார் என்றும் வில்லன் தான் ஹீரோவைத் தேடிப் போவார் என்று அறிவித்திருந்தார்.

இதனால் யார் அந்த வில்லனாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். இப்படியான நிலையில் தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்த அரவிந்த்சுவாமி ப்ரோமோ வீடியோவைப் பார்த்ததோடு தனி ஒருவன் 2 படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதனால் ஜெயம் ரவியும் தன்னுடைய நன்றியைத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement