• Sep 20 2024

மகள் சாரா செய்த செயலால் கண்ணீர் விட்டு அழுத அர்ச்சனா-நடந்தது இது தானாம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

90களில் இருந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர் தான் அர்ச்சனா. சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார் அர்ச்சனா அந்த நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபு உடன் இணைந்து தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்து அர்ச்சனா, அதன் பின்னர் ஸ்வர்ணமால்யா விட்டுச்சென்ற ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தனக்னெ ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தனது தொகுப்பாளினி பணியை செய்து வந்த அர்ச்சனா. கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .இதன் பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ச ரி க ம ‘ ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கினார் அர்ச்சனா.

அர்ச்சனாவும் அவரது மகளும் சேர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் மாம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதற்கு பெரும் ரசிகர் பட்டாளமே உருவாகியது. அதே போல கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்திலும் அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா இருவரும் நடித்து இருந்தனர். என்னதான் இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் இருந்தாலும் ஹேட்டர்ஸ்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

மேலும் அதிலும் குறிப்பாக அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பின்னர் தான் அவருக்கு ஹேட்டர்ஸ்கள் உருவாகினர். கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியின் போது கூட சமூக வலைதளத்தில் நெகட்டிவ் கமன்ட் செய்பவர்களை பற்றி அர்ச்சனா மகள் சாரா சொன்னதை கேட்டு பலரும் எழுந்து நின்று சொன்னதை கேட்டு பலரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்.

இது ஒருபுறம் இருக்க அர்ச்சனா சமீபத்தில் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில் தற்போது அவர் கண்ணீர் விட்டு அழும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அவரது மகள் ஸாரா இவரது 40வது பிறந்தநாளுக்கு ஏழு பக்கத்திற்கு ஒரு கடிதம் எழுதி கொடுத்து எமோஷ்னல் ஆக்கி இருக்கிறார்.மேலும் இதை குறிப்பிட்டு தான் எமோஷ்னலாக அழும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் அர்ச்சனா.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement