• Nov 10 2024

விவாகரத்துத் சர்ச்சைக்குப் பின்னர் தனது குடும்பத்துடன் இணைந்து புகைப்படம் வெளியிட்ட அர்ச்சனா- எப்படி இருக்காரு பாருங்க!

stella / 1 year ago

Advertisement

Listen News!


பல முன்னணி டிவி சேனல்களில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் அர்ச்சனா.இது தவிர பிக்பாஸ் சீசன் 4 இல் கலந்து கொண்டு பிரபல்யமானார்.இந்த ஷோவில் அன்பு தான் ஜெயிக்கும் என்று பேசி அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கினார். இருந்தாலும் இதனைப் பொருட்படுத்தாமல் மீண்டும் தன்னுடைய கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார்.

இது தவிர இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் தன்னுடைய மகளுடன் இணைந்து நடித்து அசத்தினார்.


டாக்டர் படத்தில் நடித்த சாரா சினிமாவில் இனிமேல் தொடர்ந்து நடிப்பாரா என்கிற கேள்விகளை அடிக்கடி நெட்டிசன்கள் வைத்து வருகின்றனர். அம்மாவுடன் இணைந்து ரீல்ஸ், யூடியூப் வீடியோக்கள் வெளியிடுவது, நிகழ்ச்சிகளை அம்மாவுடன் இணைந்து தொகுத்து வழங்குவது என ஏகப்பட்ட வேலைகளை செய்து வருகிறார்.

வெளியூர் வேலை காரணமாக அர்ச்சனாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே சமீபத்தில் மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும் அவர்கள் இருவருக்கும் அவர்களது காதலை புரியவைத்து விவாகரத்து நடக்காமல் பார்த்துக் கொண்டதே தனது மகள் சாரா தான் என சொல்லி இருந்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இப்படியொரு மகள் இருந்தால், வயதான காலத்தில் பெற்றோர்கள் விவாகரத்து பற்றிய எண்ணத்தையே தூக்கிப் போட்டு விடுவார்கள் என பலரும் சாராவையும் மனமார பாராட்டி இருந்தனர்.இந்நிலையில், தற்போது தனது கணவன் மற்றும் மகள் சாரா உடன் செம க்யூட்டாக அர்ச்சனா எடுத்துக் கொண்ட ஃபேமிலி புகைப்படத்தை பதிவிட்டு "What you want more than a FAMILY A complete profile" என பதிவிட்டுள்ளார்.


அதை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலர் சூப்பர் குடும்பம் என்றும் கண்ணுப் பட்டுடப் போகுது சுத்திப் போடுங்க அக்கா என்றும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர் வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement