• Sep 20 2024

அம்மாவின் திருமணப் புடவையை அணிந்து கியூட்டான வீடியோ வெளியிட்ட அர்ச்சனா மகள் சாரா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் 90களில் இருந்து தற்பொழுது வரை தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் அர்ச்சனா. இவர் சன்டிவி ,ஷு தமிழ், விஜய் டிவி எனப் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கின்றார்.

மேலும் இவர் ஷு தமிழில் தொகுத்து வழங்கிய சூப்பர் மம் நிகழ்ச்சியின் மூலம் பிரபல்யமானதை அடுத்து விஜய்டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபற்றி வந்தார். இந்த நிலையில் தற்பொழுது விஜய்டிவி ஷோக்களிலே அதிகம் பங்குபற்றி வருகின்றார்.

இது தவிர திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த டாக்டர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவருடன் இவருடைய மகளான சாராவும் நடித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் யூடியூப் ஒன்றையும் நடத்தி வருகின்றார்.இவரது மகளான
சாராவும் இன்ஸ்டா, யூடியூப் பக்கத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்க கூடியவர். இவர் அண்மையில் தனது அம்மாவின் திருமண புடவையை அணிந்து செம வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்களும் திருமண புடவையில் அழகாக இருக்கிறாய் என கமெண்ட் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement