வாய்ப்புகள் யாருக்கும் அவ்வளவு எளிதாக வந்து விடாது. அதற்காக பல போராட்டங்களையும் பல அவமானங்களையும் சந்தித்துதான் பலருக்கு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் பிரபல்யமான ஒருவர்தான் டான்ஸர் ரமேஷ். சாதாரண அடிதட்டு குடும்பத்தைச் சேர்ந்த இவர் தனக்குள் இருக்கும் டான்ஸ் திறமையால் சமூக வலைத்தளத்தில் பிரபலமானவர்.
50 வயதில் இவருக்கு பிரபலமாக வாய்ப்பு கிடைத்திருந்தாலும், இவருடைய ஆரம்ப காலம் அதிகமாக சோகம் நிறைந்ததாக தான் இருந்திருக்கிறது. சென்னையில் மூர் மார்க்கெட் பகுதியை சேர்ந்த ரமேஷ் டிக் டாக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் மைக்கேல் ஜாக்சன் டான்ஸ் மூலம் பல லைக்குகளை குவித்து பிரபலமானார்.
டான்சர் ரமேஷ் 50 வயதான நிலையில் சென்னை மூர் மார்க்கெட் பகுதியில் சாலை ஓர கடைகளில் தினக்கூலி வேலை பார்த்து வந்திருக்கிறார். வேலைகளுக்கு நடுவே பாடல் சத்தம் கேட்டதும் அந்த பாடல்களுக்கு ஏற்றவாறு டான்ஸ் ஆடி அங்கிருப்பவர்களை மிரள வைத்திருக்கிறார். இவருடைய டான்ஸை பார்த்து கடைக்கு வரும் பலர் இவரை பாராட்டி இருக்கின்றனர். அப்போது அவர் இருக்கும் பகுதியை சார்ந்த சிறுவர்கள் அவரை டான்ஸர் ரமேஷ் என்று அழைத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் எப்படியாவது சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று 20 வருடமாக போராடிக் கொண்டிருந்திருக்கிறார். பிரபுதேவாவின் நடன அசைவுகளை அச்சு அசலாக நடனமாடக்கூடிய ரமேஷ் தன்னுடைய தம்பி மற்றும் நண்பர்களின் உதவியால் தான் ஆடும் டான்ஸ் வீடியோவாக வெளியிட தொடங்கி இருக்கிறார்.
ஆரம்பத்தில் இவருடைய டிக் டாக் வீடியோ பிரபலமாக தொடங்கியதும் இவருக்கு ஷு தமிழில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. அப்போது அவருக்கு அங்கே செல்வதற்கு கூட காசு இல்லாமல் தான் இருந்ததாம். அவருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றார்களாம். அவர்கள் பிரபல ஜவுளி கடையில் வேலை செய்து வரும் நிலையில் நாங்கள் வீட்டை பார்த்துக் கொள்கிறோம் நீங்கள் உங்கள் திறமையை காட்டுங்க என்று அவரை அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஷு தமிழில் டான்ஸ் நிகழ்ச்சியில் இவர் பாபா மாஸ்டரை காப்பியடித்து டான்ஸ் ஆடி கலகலப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அவருடைய டான்ஸ் முன்பு பல இளம் டான்ஸர்கள் கூட தோற்றுப் போய் இருக்கின்றனர். அந்த அளவிற்கு தனக்கு இருக்கும் திறமையால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் டான்சர் ரமேஷுக்கு அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அது மட்டும் அல்லாமல் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்திலும் டான்சர் ரமேஷ் நடித்திருக்கிறாராம். இந்த நிலையில் இவர் தனது பிறந்தநாளில் புளியந்தோப்பு கேபி பார்க் குடியிருப்புக்கு சென்றாராம். அதற்கு குடியிருப்பின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இது அவருடைய ரசிகர்கள் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் இவர் தற்கொலை செய்யவில்லை என்றும் அவரை யாரோ கொலை செய்திருக்க வேண்டும் என்றும் முதல் மனைவி புகார் அளித்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!