• Sep 20 2024

பூமர் அங்கிள்ஸ் என்றால் இப்படித் தான் இருப்பார்களா?- ஏடிகேவிற்கு சரியான பதில் கொடுத்த மைனா நந்தினி

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தற்பொழுது 11 பேர் வெளியேறியுள்ள நிலையில் தற்பொழுது 10 பேர் மட்டுமே மீதமாக உள்ளனர். அத்தோடு இந்த நிகழ்ச்சியானது ஜனவரி மாத இறுதியில் முடிவடையும் என்பதும் முக்கியமாகும். இதில் யார் வெற்றியாளர் என்பதை அறிய சிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர்.

இந்த வகையில் இந்த வாரம் பள்ளிக் காலம் மற்றும் கல்லூரி’ டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.இதனால் ஹவுஸ்மேட்ஸ் அதே கதாப்பாத்திரமாக மாறி விளையாடி வருகின்றனர்.


அதன்படி, ‘இந்திரன் சந்திரன் கலைக்கல்லூரி’ ஆனது. எண்பதுகளி்ல் வந்த திரைப்படப் பாத்திரங்களாக ஹவுஸ்மேட்ஸ் மாறினர். இதனிடையே ஏடிகேவின் லுக்கை ஷிவின் கிண்டல் அடிக்க, சைக்காலஜி டீச்சரான விக்ரமனை ‘சைக்கோ’ என்று ரச்சிதா சொல்ல ஒரே கூத்தானது.

 கதிரவனோ தில்லு முல்லி ரஜினியின் ‘ஐயம்பேட்டை அறிவுடைநம்பி கதிரவன்’ என்கிற பெயரில் ரஜினியின் உடல்மொழியுடன் சுற்றிக்கொண்டிருக்க, இடையிடையே கமலின் குரலை மிமிக்ரி செய்தார் அமுதவாணன்.இந்நிலையில் தான்,‘பூமர் அங்கிள்ன்னா என்ன?’ என்று சந்தேகம் கேட்கத் தொடங்கினார் ஏடிகே. நீங்க மட்டும் எங்க இருந்து சார் இந்த கொஸ்டீன் பேப்பர்லாம் எடுக்குறீங்க என்பதற்கிணங்க பலரும் அவருடைய கேள்விகளை சொல்லலாம்.

ஆனால் அடிப்படையில் இலங்கையில் இருந்து வந்தவர் ஏடிகே என்பதால் வழக்கத்தில் புழங்கும் பூமர் அங்கிள் வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனாலும் சமீபத்திய பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ பார்த்திருந்தால், இந்த வார்த்தை கொஞ்சம் பரீச்சயமாகியிருக்கும்.


ஆனாலும் மைனா விளக்கம் அளிக்கும் பொறுப்பை எடுத்துகொண்டார். அதாவது ஒருவர் பழைய பஞ்சாங்கம் மாதிரி பழமைவாதம் பேசிக்கொண்டிருந்தால், அவரை அப்படி சொல்லலாம். இல்லை அட்வைஸாக பண்ணிக்கொண்டிருப்பார்கள், அவர்களையும் அப்படி சொல்லலாம் என மைனா விதவிதமாக விளக்கம் அளிக்க, ஏடிகே புரிந்தது போலவே தலையாட்டினார். மேலும் முத்தாய்ப்பாக, “அப்படின்னா அது அசிம்தான்” என்று முடித்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement