• Sep 20 2024

ஜூனியர் என்டிஆரின் சொத்துக்கள் இத்தனை மில்லியன் மதிப்பு வாய்ந்ததா?- ராஜவாழ்க்கை வாழ்ந்து வரும் குழந்தைகள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் தான் என்டிஆர். தொடர்ந்து  ராஜமெளலி இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான  யமதொங்கா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகினார்.

அண்மையில் இவர் ராம் சரணுடன் இணைந்து ஆர்ஆர்ஆர் என்னும் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் புலியுடன் மோதும் அறிமுக காட்சியை பார்த்தே ஹாலிவுட் ரசிகர்கள் வாய் பிளந்த நிலையில், ராம்சரணுக்கு இணையாக நாட்டு நாட்டு பாடலில் நடனம் ஆடி அகில உலகத்தையும் ஆட வைத்தார்.


மாத வருமானமே 3 கோடி ரூபாய் என்றும் ஒரு படத்துக்கு சமீப காலமாக ஜூனியர் என்டிஆர் 36 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என்றும் ஆர்ஆர்ஆர் ரீச் ஆஸ்கர் வரை சென்ற நிலையில், விரைவில் 50 கோடி வரை ஜூனியர் என்டிஆர் சம்பளத்தை அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பல கோடி ரூபாய்க்கு சொகுசு கார்களை வைத்திருக்கும் ஜூனியர் என்டிஆர் தனியாக ஒரு பிரைவேட் ஜெட்டையே வைத்துள்ளார் என்றும் டோலிவுட்டில் பல பிரபலங்கள் இவரது பிரைவேட் ஜெட்டை அவசர வேலைகளுக்கு பயன்படுத்தி வருவதாகவும் கூறுகின்றனர்.


ஹைதராபாத்தின் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் 25 கோடி ரூபாய்க்கு பிரம்மாண்டமான சொகுசு பங்களா இவருக்கு சொந்தமாக உள்ளது. மேலும், வெளிநாடுகளிலும் சில கெஸ்ட் ஹவுஸ்கள் இவரது பெயரில் உள்ளதாக கூறுகின்றனர். பாலிவுட், ஹாலிவுட் பட வாய்ப்புகள் சமீப காலமாக இவரது கால்ஷீட்டுக்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


ஜூனியர் என்டிஆருக்கு ஒட்டுமொத்தமாக 70 மில்லியன் டாலர்கள் சொத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய மதிப்பில் 571 கோடி ரூபாய் என்கின்றனர். தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் ராஜா வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் ஜூனியர் என்டிஆர் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement