• Sep 20 2024

ஜெயிலர் படத்தில் ரஜினியின் மனைவியும் நடிக்கின்றாரா... டீசர் பார்த்து குழம்பிப் போயுள்ள ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ஏராளமான வெற்றிப் படங்களைக் கொடுத்த இவர் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'. அந்தவகையில் நெல்சன் திலிப்குமார் இயக்கி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் நேற்றைய தினம் ரஜினிகாந்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்படத்திலிருந்து கிலிம்ப்ஸ் டீசர் வீடியோ ஒன்று வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ட்ரெண்டாகி வருகின்றது.


இந்த கிலிம்ப்ஸ் டீசர் வீடியோவில் இடம்பெறும் காட்சி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இடம்பெறுகிறது. இதை கவனித்த ரசிகர்கள் பலரும் ஜெயிலர் படத்தில் லதா ரஜினிகாந்த் நடிக்கிறாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Advertisement

Advertisement