• Sep 20 2024

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சரத்குமார் மற்றும் பார்த்தீபன் இந்த கதாப்பாத்திரத்தில் தான் நடிக்கின்றார்களா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வருபவர் தான் இயக்குநர் மணிரத்னம்.இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகும் என்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.

அந்த வகையில் இப்படத்திலிருந்து ஏற்கனவே பொன்னி நதி, சோழா சோழா ஆகிய சிங்கிள் பாடல்களும் போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. இவை அனைத்தும் பொன்னியின் செல்வன் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் பல மடங்கு அதிகரித்துள்ளதால், அடுத்தடுத்து அப்டேட்களையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.


 கடந்த சில தினங்களுக்கு முன் இந்த ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியாக உள்ளது பற்றியும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி, வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி, பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்பொழுது நடிகர் சரத் குமார் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்திலும், நடிகர் பார்த்திபன் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக வீடியோ ஒன்றுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.


இதனைத் தொடர்ந்து, படத்தில் உள்ள மற்ற நடிகர், நடிகைகளின் கதாபாத்திரம் கூட விரைவில் வெளியாகலாம் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement