• Sep 20 2024

குற்றம் சாட்டியவர்கள் யோக்கியமா? பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸை வறுத்தெடுக்கும் கமல்! வெளியான ப்ரோமோ 1

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.


இந்த நிலையில், 'தீர விசாரித்ததில் வந்த தீர்வு இது. இது தீர்ப்பு அல்ல. குற்றம் செய்தவர்களை அதற்கான விளைவை ஏற்றுக் கொள்ள வேண்டும். உலக நியதி குற்றம் சாடியவர்கள் யோக்கியமா? இந்த கேள்விக்கு அவர்கள் நடத்தை சொல்லும் என உலக நாயகன் சொல்லிச் சென்றுள்ளார்.

எனவே இன்றைய தினம் தரமான சம்பவம் ஒன்று உள்ளதென எதிர்பார்க்கப்படுகிறது.இது அந்த ப்ரோமோ..


Advertisement

Advertisement