• Nov 14 2024

தயாரிப்பாளருக்கும் எனக்கும் திருமணமா?- லியோ பட ஸ்டைலில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை த்ரிஷா, கடந்த சில வருடங்களாகவே தென்னிந்திய திரையுலகில் நிலையான ஒரு வெற்றி படத்தை கொடுக்க போராடி வந்த நிலையில், சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இவரின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

நந்தினியாக நடித்த உலக அழகி ஐஸ்வர்யா ராய்யை விட, 'குந்தவை' கதாபாத்திரத்தில் நடித்த, த்ரிஷா தான் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தார். த்ரிஷா தான் குந்தவை கதாபாத்திரத்திற்கான சரியான தேர்வு என ரசிகர்கள் இயக்குநர் மணிரத்னத்தை புகழ்ந்து தள்ளினர்.


'பொன்னியின் செல்வன்' வெற்றிக்கு பின்னர், தளபதி விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் கைப்பற்றினார் த்ரிஷா. அதே போல் இவர் கதையின் நாயகியாக நடித்துள்ள, 'தி ரோட்' படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இதை தொடர்ந்து தல அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா 'விடாமுயற்சி' படத்தில் நடிப்பதும் உறுதியாகியுள்ளது.இவ்வாறு சினிமாவில் கவனம் செலுத்தி வரும் த்ரிஷாவின் திருமணம் பற்றிய செய்திகளும் அடிக்கடி பேசப்பட்டு வருகின்றன.இந்த நிலையில்  மலையாள திரைப்பட தயாரிப்பாளர் ஒருவருக்கும் த்ரிஷாவுக்கும் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.


ஆனால் அந்த தயாரிப்பாளர் யார் என்ற தகவல் தெரியவில்லை. இப்படியான நிலையில் இதற்கு த்ரிஷா பதிலடி கொடுத்துள்ளார். 

அதில், “டியர், நீங்களும், உங்கள் அணியும் யார் என்பது உங்களுக்குத் தெரியும். அமைதியாக இருங்கள் வதந்திகளை பரப்பாதீர்கள். சியர்ஸ்” என்று லியோ பட ஸ்டைலில் பதிலளித்துள்ளார்.இதன் மூலம் மலையாள தயாரிப்பாளருக்கும் த்ரிஷாவுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது வதந்தி என்பது உறுதியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement