• Nov 19 2024

நடிகை ஆனந்தியின் வீட்டில் இத்தனை தத்துவ மேதைகள் உள்ளனரா?- இப்படி ஒரு ரகசியம் இருக்கா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

கயல் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் ஆனந்தி.இப்படத்தின் மூலம் பிரபல்யமான இவர் குடும்பப்பாங்கான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நெடித்து வருகின்றார்.இவரது இயற்பெயர் ஹாசிகா.ஹாசிகா என்றால் புன்னகை என்று பொருள்.

இயக்குநர் நவீனின் மனைவியான சிந்துவின் தம்பியைத்தான் கயல் ஆனந்தி திருமணம் செய்துள்ளார்.ஆனந்தியின் பெயருக்கு பின்னால் இப்படி ஒரு கதை இருப்பது போல அவருடைய கணவர் மற்றும் மகன் பெயர்களுக்கு பின்னால் கூட ஒரு கதை உள்ளது.

மரைன் இஞ்சினியராக இருந்து துணை இயக்குநராக மாறிய ஆனந்தியின் கணவர் பெயர் சாக்ரட்டீஸ்.தத்துவ மேதை சாக்ரட்டீஸின் பெயரைத்தான் அவரது தந்தை வைத்துள்ளார்.மூடர் கூடம் திரைப்படத்தில் ஒரு கதாநாயகியாக முஸ்லிம் கதாப்பாத்திரத்தில் நடித்தவர்தான் சிந்து.

கல்லூரியில் ஆசிரியையாக பணிபுரிந்தபோது, தனது நண்பர் ஒருவருக்காக அந்தப் படத்தில் நடித்திருந்தார். ஷூட்டிங்கின்போது இருவருக்கும்மிடையே காதல் மலர்ந்து, அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நவீனை மேடையில் வைத்தே ஒருமையில் பேசி அனைவரையும் அதிர்ச்சியாக்கினார்.

குறிப்பாக நவீனின் குருநாதரான இயக்குநர் பாண்டிராஜ் அதனை ஒரு பேட்டியில் குறிப்பிட்டே சொல்லி இருப்பார்.நவீன் ஒரு இஸ்லாமியராக இருந்தாலும், இவர்களின் காதலுக்கு மதம் தடையாக இருக்கவில்லை. காரணம், நவீன் பகுத்தறிவு பேசும் நாத்திகவாதி. அதே போல் சிந்து மட்டுமல்ல, அவரது குடும்பமே பகுத்தறிவு பேசும் நாத்திகர்களாம். அதனால்தான் இருவரின் காதலுக்கு மதம் ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை.

நவீன் ஒரு சினிமாக்காரர் என்பது மட்டுமே சிந்துவின் தந்தைக்கு பிரச்சனையாக இருந்துள்ளது.ஆனால் அதையும் தாண்டி அவர்களுக்கு பதிவுத் திருமணம் செய்து வைத்தார்.எனவே தான் சிந்துவின் தந்தையும் கயல் ஆனந்தியின் மாமனாருமான ஒரு பகுத்தறிவாளர் மதம், இனம், மொழி தாண்டிய பெயர்களைத்தான் தனது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சூட்டியுள்ளார். மகனுக்கு சாக்ரட்டீஸ், பேரனுக்கு ப்ளாட்டோ, உறவினர்களுக்கு ஸ்டாலின், லெனின் போன்ற பெயர்களை வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement