தமிழில் முக்கிய நடிகரான தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் நானே வருவேன். இந்தப் படத்தை இயக்குநர் செல்வராகன் இயக்குகின்றார். அத்தோடு இப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். தனுஷிற்கு ஜோடியாக இந்த படத்தில் நடிகை இந்துஜா நடித்துள்ளார்.
மேலும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பிடிப்புக்கள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட எடிட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் செல்வராகவன்- தனுஷ் – யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் வெளியான அனைத்து படங்களும், பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது அதனால் “நானே வருவேன்” படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது.
இதனையடுத்து தற்போது இந்த படத்தில் எத்தனை பாடல்கள் என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படத்தில் மொத்தம் 4 பாடல்கள் உள்ளதாகவும் அவை அனைத்தும் ரசிகர்களுக்கு பிடித்தவாறு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிறசெய்திகள்:
- 40வது பிறந்தநாளை கொண்டாடும் திரிஷா-குவியும் வாழ்த்துக்கள்..!
- காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகை தானாம்-விக்னேஷ் சிவன்
- காதலியை ரகசியமாக பதிவு திருமணம் செய்த லோகேஷ் கனகராஜ்? கசிந்த வீடியோ..!
- பிரபல நிகழ்ச்சியில் நடிகர், தொகுப்பாளினி இடையே வெடித்த சண்டை-வைரல் வீடியோ..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!