நடிகர் விஜய் பீஸ்ட் படத்தைத் தொடர்ந்த வாரிசு என்னும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார்.இவர்களுடன் சரத்குமார் ஷாம் குஷ்பு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகின்றது.
மேலும் இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.அந்த வகையில் இறுதியாக வெளியாகிய தீ தளபதி பாடலை நடிகர் சிம்பு பாடியிருந்ததோடு இப்பாடல்கள் தான் ட்ரெண்டிங்கில் உள்ளது
இந்த நிலையில் வாரிசு ட்ரெய்லருக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், படத்தின் ஆடியோ லான்ச் வரும் டிசம்பர் 24ம் தேதி இருக்கலாம் என அப்டேட் கொடுத்துள்ளார் வாரிசு படத்தில் நடித்துள்ள கணேஷ்.
இந்நிலையில், ஐதராபாத்தில் நடைபெறவுள்ள வாரிசு படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் பவன் கல்யாண் மற்றும் மகேஷ் பாபு பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் இது உறுதியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!