தமிழ் சினிமாவில் தனது சிரிப்பினாலேயே ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட நடிகை தான் சினேகா. இவர் என்னவளே என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து அஜித், தனுஷ், சூர்யா, கமல் என தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கின்றார்.
பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த வேளை நடிகர் பிரசன்னாவைக் காதலித்து திருணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு தற்பொழுது ஒரு மகனும் மகளும் உள்ளனர். இதனை அடுத்து மீண்டும் சில படங்களில் நடித்து வருகின்றார்.
அதன்படி தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.அத்தோடு ஷு தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகின்றார்.
நடிகை சினேகாவிற்கு சங்கீதா எனும் ஒரு அக்கா இருக்கிறார்.இந்நிலையில், சினேகாவின் அக்கா சங்கீதாவின் கணவர் மற்றும் மகன்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!