• Nov 14 2024

அடடே நடிகர் விஜய்யின் மாமனார் மாமியார் இவர்கள் தானா?- இந்த போட்டோவைப் பார்த்ததில்லையே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கவர்ந்திருப்பதோடு வசூல் மன்னனாகவும் ஜொலித்து வருபவர் தான் நடிகர் விஜய். இவர் கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சஞ்சய் எனும் ஒரு மகனும், திவ்யா எனும் ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் இவரது நடிப்பில் இறுதியாக பீஸ்ட் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருந்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அள்ளிக் குவித்தது.

இதனை அடுத்து தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்திற்கு வாரிசு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் விஜய் தனது திருமணத்தின் போது சங்கீதாவின் தாய், தந்தையுடன் நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement