• Nov 14 2024

நடிகை தேவயானி மற்றும் நடிகர் நகுலின் பெற்றோர் இவர்கள் தானா?- கியூட்டான பமிலி போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை தேவயானி.இவர் காதல் கோட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

அந்த வகையில் விஜய், கமல் ஹாசன், கார்த்திக் ,அஜித் எனப் பல நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.இவர் படங்களில் பிஸியாக நடித்து வரும் நேரத்தில் இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்த கொண்டார்.


இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். நீண்ட இடை வெளிக்குப் பின்னர் தற்பொழுது ஷு தமிழில் ஒளிபரப்பாகும் புத்தம் புது அர்த்தங்கள் என்னும் சீரியலில் நடித்து வருகின்றார்.இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது.


நடிகை தேவயானியின் தம்பி தான் நடிகர் நகுல் என்பதை நாம் அறிவோம். இந்நிலையில், நடிகை தேவயானி தனது அப்பா, அம்மாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement