தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் பரத். இதனைத் தொடர்ந்து இவர் விஷால் நடிப்பில் வெளியான செல்லமே திரைப்படத்தில் நெக்கடிவ் ரோலில் நடித்திருந்தார்.
தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த நடிகர் பரத், அதன்பின் சற்று பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார்.பின் காளிதாஸ் படத்தின் மூலம் கம் பேக் கொடுத்திருந்தார். இவரது நடிப்பில் சில நாட்களுக்கு முதல் மிரள் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.
த்ரில்லர் கதைக்களத்தில் அமைந்துள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.நடிகர் பரத் கடந்த 2013ஆம் ஆண்டு Jeshley என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், பரத் தனது மனைவி மற்றும் இரட்டை குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் தமது லைக்குகளை குவித்து வருவதையும் காணலாம்.
Listen News!