• Nov 19 2024

ஒரே உடை அணிந்து மாட்டிக்கொண்ட நடிகைகள்... அட இவர்கள் இருவரும் இந்த நடிகரின் மகள்களா..?

ammu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை ஜீவிதா 1990 காலத்தில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை. இவர் தமிழில் டி. ஆர் இயக்கத்தில் வெளியான “உறவுகாத்தக் கிளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஹீரோக்களான விஜயகாந்த, ராமராஜன், அர்ஜுன் போன்ற நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தார். 


அதுமட்டுமல்லாமல் கவுண்டமணி கதாநாயகனாக நடித்த”பிறந்தேன் வளர்ந்தேன் ” என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். பின்னர் பிரபல தெலுங்கு இயக்குநர் ராஜசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஷிவானி மற்றும் ஷவாத்மிகா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். 


இவர்கள் இருவரும் சினிமாத்துறையில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிரபல நடிகைகளாக உள்ளனர். இந்த நிலையில் தான் அக்கா தங்கையான இவர்கள் இரண்டு பேரும் ஒரே நேரத்தில் தங்களது சோசியல் மீடியாக்களில் பதிவிட்டிருக்கும் புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான ஹாப் என்ற படத்தில் ஷிவானி சமீபத்தில் நடித்திருந்தார். அதேபோல அமைச்சர் உதயநிதி நடித்திருந்த “நெஞ்சுக்கு நீதி” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் தெலுங்கில் "ஆஹா நா பெல்லண்டா" என்ற இணைய தொடரிலும், "வித்யா வஸுல அஹம்" என்ற படத்திலும் நடித்து வருகிறார்.


இந்நிலையில் இவரது தங்கை ஷிவாத்மிகா கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான “டொரசனி” என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகினார். சமீபத்தில் கூட இயக்குநர் நந்தா பெரியசாமி, கவுதம் கார்த்தி நடித்த “ஆனந்தம் விளையாடும் வீடு” என்ற படத்தில் நடித்திருந்தார். அதோடு நித்தம் ஒரு வானம், பட்சதந்திரம் போன்ற படங்களில் நடித்திருந்தார். 


இந்நிலையில் தான் ஷிவானியும், ஷிவாத்மிகாவும் போட்டி போட்டு கொண்டு தங்களுடைய இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர். இதில் என்ன ஆச்சரியம் என்றால் அக்கா, தங்கை இருவரும் இதில் ஒரே நிறமுடைய மற்றும் வடிவமுடைய உடையில் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.








Advertisement

Advertisement