சமீப காலங்களில் பிரபலமாகிக்கொண்டு இருக்கும் யூடியூப் பிரபலங்கள் மீது அதிக குற்றசாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறே இர்பானை அடுத்து இன்று TTF வாசன் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக நீதிமன்றம் அழைத்துச்செல்லப்பட்டபோது சில வார்த்தைகள் கூறியுள்ளார்.
செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டிய வழக்கில் கைதான TTF வாசன் மீது ஜாமினில் வெளியே வர முடியாத வகையில் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வேகமாக வாகனம் ஓட்டுதல், விபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல், விதிகளை மீறியது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது பிறருக்கு மரணம் ஏற்படுத்தும் வகையில் ஒரு காரியத்தை செய்தல் என மற்றொரு பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையிலேயே இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக TTF வாசனை போலீசார் அழைத்து வந்த போது பத்திரிகையாளர்களை பார்த்து சில வார்த்தைகள் கூறியுள்ளார். அவர் கூறுகையில் " என்னை பார்த்துதான் மக்கள் கெட்டுப்போகிறார்கள் என்றால் தெருவுக்கு தெரு மதுக்கடைகள் உள்ளது அதை பார்த்து கெட்டுப்போக மாட்டார்களா ? " என கூறியுள்ளார்.
Listen News!