• Nov 10 2024

லியோ சரிவுக்கு இவர்கள் தான் காரணமா? வெளியானது தகவல்.

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

லோகேஷ் எடுத்த விக்ரம், கைதி, படத்திற்கு முன்னால் லியோவால் முன் நிற்க முடியவில்லை. சொதப்பி வைத்திருக்கின்றனர். இதற்கு காரணம் என்ன என்பதை லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் வெளிப்படையாக கூறியுள்ளார்.



பீஸ்ட், வாரிசு படத்திற்கு முன்பு லோகேஷின் படத்தில் நடிப்பதாக இருந்தது.அதற்கான கதையை எல்லாம் விஜய் ஏற்கனவே கேட்டு விட்டு ஓகே சொல்லியிருக்கின்றார். லோகேஷ் விக்ரம் படத்தில் பிஸியாக இருந்ததனால் பீஸ்ட், வாரிசு படத்தை முடித்துவிட்டு. அடுத்து லியோ படத்தில் இணைந்தார். லியோ படத்தின் கதையை தயாரிப்பாளர் லோகேஷ் கேட்ட பிறகு விஜய்யும் லலித்தும் கதையில் ஒரு சில மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என வற்புறுத்தி உள்ளனர்.  இதனால் லோகேஷ் நினைத்து வைத்திருந்த படத்தின் கதையை இவர்கள் இருவரும் தான் சேர்ந்து மாற்றிவிட்டனர். வேறு வழி இல்லாமல் லோகேஷூம் இவர்கள் சொன்னபடி கதையை மாற்றியதால் தற்போது இப்பிபடிப்பட்ட விளைவை சந்தித்திருப்பதாக லலித் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.



ஒருவேளை லோகேஷ் வழியிலையே படத்தை எடுத்திருந்தால் அது கண்டிப்பாக சூப்பராக வந்திருக்கும். பக்கா ஆக்சன் படமாக லோகேஷ் லியோவை எடுக்க பார்த்திருக்கின்றார். ஆனால் இந்த படத்தின் இரண்டாம் பாதியை சொதப்பிவிட்டனர். 40 நிமிஷம் பைட் ஷோ தான் இருக்கிறது. இந்த பைட் சீனுக்கு குறைந்த காட்சிகளை மட்டுமே லோகேஷ் வைத்திருந்தார்.

Advertisement

Advertisement