• Sep 20 2024

வாரிசு மற்றும் ஏ.கே61 ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றனவா?- விஜய் ரசிகர்களிடம் வசமாக சிக்கிக் கொண்ட உதயநிதி

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இரு பெரும் நட்சத்திரமாக விளங்குபவர்கள் தான் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவருக்கும் ஏராளமான ரசிகள்கள் இருப்பதோடு இருவரும் படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர்.

அந்த வகையில் விஜய் வாரிசு திரைப்படத்திலும் அஜித் ஏ.கே 61 திரைப்படத்திலும் நடித்த வருகின்றனர். மேலும் இவர்களின் ரசிகர்கள் தமக்கிடையே மோதிக் கொள்வதும் உண்டு.அத்தோடு இவர்களின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் வசூலில் அள்ளிக் குவிப்பதும் முக்கியமாகும்.


இந்த நிலையில் இவர்கள் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இவர்கள் இருவரின் நடிப்பில் உருவாகிய படங்கள் ஒரே நாளில் வெளியாவது என்பது என்பது அரிதான செயலே. இருப்பினும் சில ஆண்டுகளுக்கு முதல் வீரம் மற்றும் ஜில்லா ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகியது.

ஆனால் அப்போது இருந்த சூழ்நிலையால் அதனை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர். அதே போல விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் ஏ. கே 61 திரைப்படமும் ஒரே நாளில் வெளியாவதாக தகவல் வெளியாகியுள்ளது.அதாவது வாரிசு திரைப்படமானது ஏற்கனவே பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.


இந்த நிலையில் ஏ.கே 61 திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி கைப்பற்றி இருப்பதால் அவர் ஏ.கே61 திரைப்படத்தினை வாரிசு படத்தின் ரிலீஸ் திகதியிலேயே வெளியிடுவார் என்றும் கருதப்படுகின்றது. ஆனால் அப்படி வெளியிட்டால் ரசிகர்கள் தமக்குள் மோதிக் கொள்வதோடு பல பிரச்சினைகளும் எழுந்து விடும் என்றும் கூறப்படுகின்றது.

மேலும் விஜய்க்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கும் காரணத்தால் தனது அரசியல் வாழ்விலும் சரிவு ஏற்படும் என்ற காரணத்தால் உதயநிதி வாரிசு திரைப்பட ரிலீஸ் திகதியில் ஏ.கே 61 திரைப்படத்தை வெளியிடமாட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement