• Nov 19 2024

நீங்க விவாகரத்து பண்ணீட்டீங்களா?, இதுக்கு நான் எதுவுமே சொல்ல மாட்டேன்- தொகுப்பாளரால் கோபப்பட்ட நடிகை சுவாதி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் தான் சசிகுமார்.இவரது கெரியரில் முக்கியமான திரைப்படமாக அமைந்த திரைப்படம் தான் சுப்பிரமணியபுரம்.இப்படத்தில் கதாநாயகியாக நடிகை சுவாதி நடித்திருந்தார்.இதனைத் தொடர்ந்தும் சில படங்களில் நடித்திருந்தார்.

பின்னர் சினிமாவில் வாய்ப்புக்கள் குறைந்ததால் கடந்த 2018 ஆம் ஆண்டு விகாஸ் வாசு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.அதைத்தொடர்ந்து இவர் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்து விட்டதாக கூறப்பட்டது.இதற்கு முக்கிய காரணம் அவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் இருந்த திருமண புகைப்படங்களை நீக்கியது தான் முக்கியமானது. 


ஆனால் சமீபத்தில் தெலுங்கு பட விழாவில் அவர் கலந்து கொண்ட போது பத்திரிக்கையாளர் ஒருவர் இது குறித்து வெளிப்படையாக கேள்வி எழுப்பினார். பொதுவாக நடிகைகள் பலரும் இது போன்ற தனிப்பட்ட விஷயங்களை மேடையில் பேச மாட்டார்கள்.ஆனால் சில மீடியாக்கள் இது போன்ற சங்கடமான கேள்விகளை கேட்பதையே வழக்கமாக வைத்திருக்கிறது.

 அப்படித்தான் சுவாதியிடமும் விவாகரத்து குறித்து கேட்கப்பட்டது.இதனால் டென்ஷனான அவர் கூறி இருப்பதாவது, இதற்கு நான் பதில் சொல்ல மாட்டேன்.ஏனென்றால் எனக்கு என்று சில விதிமுறைகளை நான் வைத்துள்ளேன். அதில் ஒன்றுதான் தனிப்பட்ட விஷயங்களை பொதுவெளியில் பகிர்ந்து கொள்ள கூடாது என்பது. அதனால் உங்களுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன் என்று ஒரே போடாக போட்டார். இதனால் பாவம் கேள்வி கேட்டவரின் முகம் தான் சுருங்கி போனது. அந்த வகையில் சுவாதியின் இந்த தைரியமான பதில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Advertisement

Advertisement