• Nov 19 2024

சித்தார்த்துடன் காதலா..? வெட்கப்பட்டு அதிதி ராவ் கொடுத்த கியூட் பதில்கள்..

Jo / 1 year ago

Advertisement

Listen News!

அண்மைக்காலமாக அதிகம் கிசுகிசுக்கப் பட்ட இருவர் என்றால்  நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் பேச்சுகள் எடுபட்டன தற்போது இந்த சந்தேகங்களுக்கு  கிட்டத்தட்ட ஒரு பதிலை கொடுத்திருக்கிறார் அதிதி. 

அதிதி மற்றும் சித்தார்த் இருவரும் நிறைய பொது இடங்களில் ஒன்றாக காணப்படுகிறார்கள். இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக சமூக  வலைதளங்களில் செய்திகள் பரவின. ஆனால் அதிதி மற்றும் சித்தார்த் ஆகிய இருவரும் இது தொடர்பாக தங்களது சார்பின் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. தற்போது நிகழ்ச்சி ஒன்றில் அதிதியிடம் இது தொடர்பாக கேள்விகேட்கப்பட்டபோது அதற்கு அவர் தெரிவித்திருக்கும் பதிலை வைத்து ஒன்று தெளிவாகிறது

சித்தார்த்துடன் தனது உறவு பற்றி கேட்கப்பட்டபோது அதிதி வெட்கப்பட்டதோடு தனது வாயையும் மூடிக்கொள்ளும் வகையில் கியூட்டான ஜாடை செய்துள்ளார். மெளனம் சம்மதம் என்கிற வாக்கியத்திற்கு ஏற்றதாக இவரது இந்த பதில் புரிந்துகொள்ளப்படுகிறது.

அதிதி மற்றும் சித்தார்த் ஆகிய இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான  மகாசமுத்திரம் என்கிற படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். இந்தப் படத்தின் படபிடிப்பு தளத்தில் இருவரும் காதல் வயப்பட்டதாக தகவல்கள் பகிரப்படுகின்றன

 இதனைத் தொடர்ந்து பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளில் இருவரும் இணைந்தே காணப்படுகிறார்கள்.பொன்னியின் செல்வன் பட நிகழ்ச்சி,ஏ.ஆர்.ரஹ்மானின் மகளின் திருமண நிச்சயதார்த்தம் ஆகிய நிகழ்ச்சியில் இருவரும் இணைந்தே கலந்துகொள்கிறார்கள். மேலும்  இருவரும் சேர்ந்து சமூக வலைதளங்களில் வீடியோக்களை பகிர்வது பாடலிற்கு சேர்ந்து நடனமாடுவது என ரசிகர்களுக்கு புதிராகவே இருக்கிறார்கள். தற்போது இந்த குழப்பத்தை எல்லாம் அதிதியின் கியூட்டான பதில் ஓரளவிற்கு குறைத்திருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Advertisement

Advertisement