செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் ,இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ.S .லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கின்றார்.
இந்த படத்தின் வசனங்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இயக்குநர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். மேலும் பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் ஆடியோ உரிமத்தை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை சன் டிவி கைப்பற்றி உள்ளது.
இந்நிலையில் பிரபல சேனலுக்கு நடிகை ஜனனி பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் "லியோ படத்தில் நடிகர் விஜய்யின் மகளாக நடிக்கிறீங்களா?" என்கிற கேள்விக்கு "அதெல்லாம் கம்பெனி சீக்ரெட் " என பதில் அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!