• Nov 19 2024

நீங்களே கர்ப்பமாக இருக்கீங்க.. இதெல்லாம் உங்களுக்கு தேவையா..? ரசிகர்களின் கேள்விக்கு நடிகை கொடுத்த பதில்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ். இதில் ஒளிபரப்பாகும் சீரியல் அனைத்திற்குமே ஏராளமான ரசிகர்கள் உண்டு. அவ்வாறான சீரியல்களில் ஒன்று தான் 'யாரடி நீ மோகினி'. இந்த சீரியல் மூலம் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை நட்சத்திரா. 


இதனைத் தொடர்ந்து பின்னர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான 'வள்ளி திருமணம்' என்ற சீரியலிலும் நடித்திருந்தார். இவ்வாறு பல சீரியல்களில் பிசியாக நடித்து வந்த இவர் கடந்த ஆண்டு, சினிமா தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டார்.


இவர்களின் திருமணமானது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நட்சத்திரா சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதை சமூக வலைத்தளத்தின் மூலமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஜோடி நிகழ்ச்சியில் தன் கணவருடன் இணைந்து பங்கேற்று வருகிறார். இதனைப் பார்த்த அவரின் ரசிகர்கள் "இந்த மாதிரி நேரத்துல எதுக்கு, ரியாலிட்டி ஷோவில் எல்லாம் கலந்து கொள்கிறீர்கள்? என்று அவரிடம் கேள்வி எழுப்பினர். 


இதற்கு தற்போது பதிலளிக்கையில் நட்சத்திரா "இந்த ஷோவில் உடல் செயல்பாடுகள் எதுவும் இல்லை. சும்மா பேசுவது, அனுபவம் ஐ பகிர்ந்து கொள்வது அந்த மாதிரி தான் இருக்கும். இதை முழுவதுமாக விசாரித்து விட்டு தான் இந்த ஷோவில் கலந்து கொண்டேன். எனவே ரசிகர்கள் என் உடல்நிலை குறித்து கவலைப்பட வேண்டாம்" என அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். 


Advertisement

Advertisement