2005ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஆர்யா. உள்ளம் கேட்குமே படத்தில் அப்படியே சாக்லேட் பாயாக மாறிய அவர் பல படங்களில் அப்படியே பல் இளித்தபடியே நடித்து ஏகப்பட்ட ரசிகைகளின் மனதில் பாஸ் என்கிற பாஸ்கரனாகவே மாறினார்.
அதே சமயம் பாலாவின் நான் கடவுள், அவன் இவன் படங்களில் தனக்குள் இருந்த நல்ல நடிகரையும் வெளிக்கொண்டு வந்தார். அதன் விளைவாக மகாமுனி, சார்பட்டா பரம்பரை என மிரட்டலான படங்களையும் கொடுத்து வந்த ஆர்யா சமீப காலமாக ஆக்ஷன் படங்களில் நடித்து வருகிறார்.
வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த், காப்பான், டெடி உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை சாயிஷா ஆர்யாவை திருமணம் செய்துக் கொண்டு சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் வெளியான சிம்புவின் பத்து தல படத்தில் கெளதம் கார்த்திக்குடன் இணைந்து ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான ராவடி பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது 2 வயதே ஆகும் தனது செல்லக்குட்டி அரியானாவுடன் தற்போது டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை நடிகை சாயிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.
சாயிஷா போல ஆடுவாருன்னு பார்த்தால் ஆர்யா போல ஆடுறாரே குட்டிப் பொண்ணு என்றும் இப்பவே டான்ஸ் பயிற்சி கொடுக்கிறீங்க, அடுத்த ஹீரோயினா அரியானாவை ரெடி பண்றீங்களா என சாயிஷாவின் நண்பர்களும் ரசிகர்களும் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
Listen News!