நடிகர் விஜய் தனது 49-வது பிறந்தநாளை கடந்த 22ம் தேதி கொண்டாடினார். விஜய்யின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டனர்.
ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கியது, இலவச பேருந்து இயக்கியது, நேற்று பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்தது, இரத்த தான் முகாம் நடத்தியது என விஜய் ரசிகர்கள் அதகளப்படுத்தினர்.
இது ஒருபுறம் இருக்க நடிகர் விஜய்க்கு சினிமா முதல் அரசியல் பிரபலங்கள் வரை ஏராளமானோர் வாழ்த்து மழை பொழிந்தனர். ரசிகர்களும் தன் பங்கிற்கு விஜய்யை வாழ்த்தி புகைப்படங்கள், வீடியோ என சோசியல் மீடியாவை ஆக்கிரமித்தனர்.மேலும் அவர் நடித்து வரும் லியோ படத்தின் போஸ்டரும் பெஸ்ட் சிங்கிள் பாடலும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.
நடிப்பில் பிஸியாக இருந்தாலும் அண்மையில் 10 மற்றும் 12ம் வகுப்பில் திறமைச்சிற்றி பெற்ற மாணவர்களை சந்தித்து அண்மையில் ஊக்கத் தொகை வழங்கியிருந்தார்.இதனால் விஜய் அரசியலுககு வரப் போகின்றார் என்ற பேச்சு அடிபட்டுக் கொண்டே இருக்கின்றது. ஆனால் விஜய் தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இப்படியான நிலையில் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார். அதில் விஜய்யை எதிர்த்து அரசியல் செய்வீங்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய உதயநிதி முதலில் அவர் அரசியலுக்கு வரட்டும் தன்னுடைய கொள்கைகளை சொல்லட்டும். அவரது கொள்கைகள் எங்களுடைய கொள்கைக்கு ஏற்ற விதமாக இருந்தால் தொனே ஆதரிக்கிறதா அல்லது அவருக்கு எதிராக அரசியல் செய்யிறதா இல்லையா என்று தெரியும்.
முதலில் அவர் வரட்டும். அவர் யோசிக்கிறதுககு கொஞ்சம் டைம் கொடுங்க. அவர் தான் இன்னும் எதுவுமே சொல்லலையே வந்ததுக்கப்பிறம் பார்ப்போம் என்று தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!