• Sep 21 2024

தியேட்டரில மாமன்னன் படம் பார்க்க ரெடியா..டிக்கெட் முன்பதிவு ஸ்டார்ட்..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

மாமன்னன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு மாறுபட்ட முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் பகத் பாசில் இப்படத்தில் வில்லனாகவும், கீர்த்தி சுரேஷ் இப்படத்தின் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்து வரும் ஜூன் 29ந் தேதி வியாழக்கிழமை படம் திரையரங்கில் வெளியாக உள்ளது.

மாமன்னன் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. 3 நிமிடம் ஓடக் கூடிய இந்த டீசர் வடிவேலுவின் அமைதியான வசனத்துடன் தொடங்கி வடிவேலு மற்றும் உதயநிதியின் அதிரடியான தோற்றத்துடன் நிறைவடைகிறது. 

சமீபத்தில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடிகர் கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் நடைபெற்றிருந்தது.

இத்திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பதால், ஒட்டுமொத்த திரையுலகமும் இப்படத்தை திரையில் காண ஆவலுடன் உள்ளனர். 

இத்திரைப்படத்தின் முன் பதிவு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் குறித்து எழுந்த சர்ச்சைகள் விமர்சனங்கள் அனைத்திற்கும் பதில் கிடைக்கும் என்ற ஆவலில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement