• Nov 19 2024

நீங்கள் வனிதாவின் மகனா?-என்று கேட்ட நபருக்கு பதிலடி கொடுத்த ஸ்ரீஹரி-என்ன கூறியிருக்கிறார் பாருங்க

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகை என்ற பட்டத்தோடு அறிமுகமானவர் தான் வனிதா விஜயகுமார். இவர் பிரபல நடிகரான விஜயகுமாரின் மகள் என்பதும் தெரிந்ததே. ஆரம்பத்தில் சில திரைப்படங்களில் நடித்தாலும் பின்பு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவை விட்டு விலகினார்.

இதனைத் தொடர்ந்து இவர் கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு ஸ்ரீஹரி என்ற மகனைப் பெற்றெடுத்தார். நன்றாக இவர்களது திருமண வாழ்க்கை சென்றுகொண்டிருக்க கடந்த 2005ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

இதனால் தனது மகனை தன்னுடன் அனுப்பி விட வேண்டும் என்று ஆகாஷ் வழக்கு தொடர்ந்து அதில் ஜெயித்தார். பின் வனிதாவிற்கு அடுத்தடுத்து நடந்த திருமண தோல்விகள் குறித்து நமக்கு தெரிந்த விஷயம் தான்.

அண்மையில் வனிதாவின் மகனான ஸ்ரீஹரி அண்மையில் பிறந்தநாளைக் கொண்டாடி இருந்தார். வனிதாவும் தனது மகனுக்கு சமூக வலைத்தளத்தின் ஊடாக வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

அதில் ஒரு ரசிகர் நீங்கள் வனிதாவின் மகனா ப்ரோ என கேட்க அதற்கு ஸ்ரீஹரி, நான் ஆகாஷின் மகன் என பதில் கூறியுள்ளார். இதைவைத்து பார்க்கும் போது வனிதா அவரது மகனுடன் பேசுவது இல்லை என்பது நன்றாக தெரிகிறது.

https://www.youtube.com/embed/A1sU15cHeCw

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement