• Sep 20 2024

குணசேகரனின் நிலை இப்படி பரிதாபமாகிடுச்சு என்று உங்களுக்கு கவலையில்லையா?- குத்தாட்டம் போட்ட ஷக்தி மற்றும் ஆதிரை- வெளியாகிய வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.அடித்தட்டு மக்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்கள் வரைக்கும் இந்த சீரியல் குறித்து தொடர்ச்சியாக பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.

 அதுபோல திரைத்துறையில் மின்னிக் கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் விஜய் போன்ற பிரபலங்கள் வீட்டிலும் இந்த சீரியல் பார்க்கப்படுவதாக கூறி இருக்கிறார்கள்.


சீரியலின் கதைப்படி அப்பத்தா குணசேகரனுக்கு கொடுப்பதாக கூறிய சொத்தின் 40 வீதத்தை ஜுவானந்தம் என்னும் புதிய நபர் தன்னுடைய பெயருக்கு மாற்றி விட்டார். இதனால் சொத்தை குணசேகரன் எப்படி மீட்கப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

மேலும் இந்த சீரியலில் நடித்து வரும் பிரபலங்கள் தம்முடைய ப்ரீ டைம்ல ரீல்ஸ் வீடியோ செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் தற்பொழுது ஆதிரையும் ஷக்தியும் சேர்ந்து கொக்கரக் கொக்கரக்கோ பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்த பலரும் அண்ணனுக்கு இருக்கிற பிரச்சினையில தம்பியும் தங்கச்சியும் இப்படியா ஆட்டம் போடூவீங்க எனக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement