• Nov 17 2024

உலககோப்பையை தட்டித் தூக்கிய அர்ஜென்டினா- வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள் யார் யார் தெரியுமா?-மாஸ் காட்டிய மெஸ்ஸி..

stella / 1 year ago

Advertisement

Listen News!

நேற்றைய தினம் FIFA உலககோப்பை 2022ன் இறுதி ஆட்டம் கட்டாரில் நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் பிரான்ஸ் மற்றும் ஆர்ஜன்டீனா ஆகிய இரு அணிகள் விளையாடினார்கள். இந்த ஆட்டத்தை உலகில் உள்ள ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் கண்டு ரசித்தனர். 


இரு அணிகளும் இப்படியொரு இறுதிப்போட்டியை விளையாடுவார்கள் என யாருமே எதிர்பார்க்கவில்லை. முதல் பாதியிலேயே அர்ஜென்டினா அணி 2 கோல்கள் அடித்த நிலையில், வெற்றி அந்த அணிக்குத்தான் என எண்ணிய நிலையில், திடீரென பிரான்ஸ் 2 கோல்கள் அடித்து சமன் செய்தது. பின்னர், மீண்டும் அர்ஜென்டினா 3வது கோல் அடிக்க கடைசி நேரத்தில் மறுபடியும் பிரான்ஸ் 3வது கோல் அடித்து எக்ஸ்ட்ரா டைம் மற்றும் ஷூட் அவுட் முறைக்கு கொண்டு சென்றது. 


ஆனால், கடைசியில் அர்ஜென்டினா அணி வீரர்கள் கோல்களை அடித்து வெற்றி பெற்றனர்.மோகன்லால், மம்மூட்டி, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பிரபலங்கள் நேரடியாக கத்தாருக்கே சென்று இறுதிப் போட்டியை கண்டு ரசித்தனர். நடிகை பூஜா ஹெக்டே.. இந்த மேட்ச் தான் எல்லா மேட்ச்சையும் விட சிறந்தது என்றும், தனக்கு இப்போ தான் மூச்சே வந்தது.. சூப்பர் மெஸ்ஸி என பதிவிட்டுள்ளார்.


ஃபேரி டேல் என்டிங் நிஜத்திலும் சாத்தியம் தான். இந்த ஆண்டின் சிறந்த ஹாப்பியான தினம் என்றால் அது இதுதான்.. மெஸ்ஸி! என ட்வீட் போட்டு நடிகர் தனுஷ் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் மெஸ்ஸி கோல் அடித்த பின்னர் கொடுத்த போஸ் புகைப்படத்தை பதிவிட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார். அர்ஜென்டினா வெற்றியை ஒட்டுமொத்த சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் கொண்டாடி வருகின்றனர்.


நடிகரும் பிக் பாஸ் பிரபலமுமான கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் தேங்க்யூ மெஸ்ஸி என ட்வீட் போட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார். கவின் ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் அர்ஜென்டினா உலக கோப்பையை வென்ற வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.


Adrenaline messsssssssssiiiiiiiiiied !!!! என கமெண்ட் போட்டு என்னவொரு கேம் இது என்றும் பிரான்ஸ் வீரர் எம்பாப்பேவின் ஆட்டம் எல்லாம் வேறலெவல் அவருடைய கடும் உழைப்பு நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று என தனது கருத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement