• Sep 20 2024

மீண்டும் ஒன்று சேர்ந்த அர்ஜுன் மற்றும் தமிழ்- கார்த்தி சேர்மன் ஆனது பிடிக்கலையா?- கலாய்த்து வரும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் அர்ஜுனின் சூழ்ச்சியால் தமிழ் வீட்டை விட்டு போனதோடு தன்னுடைய வீட்டின் மீது செம கோபத்தில் இருக்கின்றார். அர்ஜுன் சொல்வது யாருமே பொய் என்று சொல்லல.இதனால் தன்னுடைய அம்மா அப்பாவையே தமிழ் வெறுத்து விட்டார்.

இப்படியான நிலையில் தமிழ் வீட்டை விடட வெளியேறியதோடு சொந்தமாக பிஸ்னஸ் செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார்.இப்படியான நிலையில் அடுத்த சேர்மனாக அர்ஜுன் தான் தெரிவு செய்யப்படுவார் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோதை கார்த்திக்கை சேர்மனாகத் தேர்வு செய்துள்ளார். இதனால் அர்ஜுன் குடும்பத்தின் மீது செம கோபத்தில் இருக்கின்றார்.


மேலும் தமிழ் எப்போது முன்னுக்க வருவார். அவருடைய பெற்றோர் எப்போது அர்ஜுனைப் பற்றி அறியப் போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். இப்படியான நிலையில் தமிழும் அர்ஜுனும் இணைந்து ரீல்ஸ் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளனர்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் கார்த்திக் சேர்மன் ஆகியதும் நீங்க இரண்டு பேரும் கூட்டுச் சேர்ந்திட்டீங்களா எனக் கலாய்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement