விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் அர்ஜுனின் சூழ்ச்சியால் கோதை குடும்பம் வீட்டை விட்டு வெளியேறியதோடு தமிழின் வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ராகினிக்கு வளைகாப்பு பண்ண வேண்டும் என்று அர்ஜுன் முடிவெடுக்கின்றார். அப்போது ராகினி தன்னுடைய வளைகாப்புக்கு தன்னுடைய அம்மா வரவேண்டும் என்கின்றார். ஆனால் அர்ஜுனின் அம்மா அதற்கு மறுப்புத் தெரிவித்து விடுகின்றார்.
இருந்தாலும் ராகினியின் ஆசைக்காக மீண்டும் அர்ஜுன் கோதையை சென்று பார்ப்பதோடு வளைகாப்பு நடத்தப் போகும் விஷயத்தையும் சொல்கின்றார். இதைக் கேட்டு கோதை என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!