• Nov 19 2024

கல்யாணம் ஆகாமலே மலைக்கா அரோரா கர்ப்பமாக இருக்கிறாரா..? மௌனம் கலைத்த அர்ஜுன் கபூர்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் கபூர். இவர் தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் என்பது யாவரும் அறிந்த ஒன்றே. அர்ஜுன் கபூர் பிரபல பாலிவுட் நடிகையான மலைக்கா அரோராவை காதலித்து வருகிறார். 

அந்தவகையில் நடிகை மலைக்கா அரோரா தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'உயிரே' என்ற படத்தில் இடம்பெறும் "தைய தையா..." என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் பாலிவுட் சினிமாவை பொறுத்தவரையில் வயது வரம்பில்லாமல் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் வாழ்வது சகஜமாகிவிட்டது. அதில் தற்போது பெரியளவில் பேசப்பட்டு வருபவர்கள் தான் அர்ஜுன் கபூர்-மலைக்கா அரோரா ஜோடி தான். இதில் அர்ஜுன் கபூரை விட கிட்டத்தட்ட 9 வயது மூத்தவராக இருக்கிறார் மலைக்கா. 


இவர்கள் இருவரும் ஜோடியாக அடிக்கடி வெளியூர் சென்று வருகின்றனர். இந்நிலையில் மலைக்கா அரோரா கர்ப்பமாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது. அதாவது சமீபத்தில் அர்ஜுன் கபூரும், மலைக்காவும் லண்டன் சென்றபோது தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் இது தொடர்பாக பேசியிருந்ததாகவும் அந்த தகவலில் கூறப்பட்டிருந்தது. ஆனால் இருவரும் இந்த விவகாரம் தொடர்பாக இருவரும் பல நாட்களாக மௌனம் காத்து வருகின்றனர்.மௌனம் காத்துவந்தனர்.


இதனைத் தொடர்ந்து நடிகர் அர்ஜுன் கபூர் இது குறித்து தற்போது கருத்து வெளியிட்டுள்ளார். அதில் "எதிர்மறையான விஷயங்களை எல்லோராலும் எளிதாக செய்துவிட முடியும். மக்கள் அதன் மீது அதிக கவனம் செலுத்துவதால் இந்த மாதிரியான விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவுகின்றன என நினைக்கிறேன். யாரவது எங்களைப் பற்றி முக்கியமான விஷயங்களை எழுதும்போது அது குறித்து எங்களிடம் நேரடியாக கேளுங்கள். நீங்களாக யூகித்து எதையும் எழுதக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement