• Nov 10 2024

காதலனின் பிறந்த நாளில் குடித்து விட்டு குத்தாட்டம் போட்ட அர்ஜுன் கபூரின் காதலி

stella / 1 year ago

Advertisement

Listen News!


தெலுங்கு சினிமாவில் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகிய உயிரே’ படத்தின் "தைய தைய தைய்யா" என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்தவர் மலைக்கா அரோரா.  மணிரத்னம் இயக்கத்தில் உருவான இப்படத்தில் இப்பாடல் தான் ஹைலைட் எனலாம். தற்பொழுதும் இப்பாடல் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பாடலாகவும் இருக்கின்றது.

இப்பாடல் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். இது தவிர பல்வேறு ஹிந்தி படங்களிலும் நடித்து வந்தார்.1998-ம் ஆண்டில் தயாரிப்பாளர் அர்பாஸ்கானை திருமணம் செய்தார். 2017-ம் ஆண்டு அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து ஆனது. பின்பு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் முதல் மனைவியின் மகனான அர்ஜுன் கபூரை காதலித்தார்.


 மலைக்கா அரோரா, அர்ஜுன் கபூரை விட 12 வயது மூத்தவர் ஆவார். காதலுக்கு எதிர்ப்பு வந்த நிலையில் காதலிக்க வயதில்லை மனசு தான் காரணம் என்று லிவிங்டு கெதராக வாழ்ந்து வருகின்றனர்.


இந்த நிலையில் அர்ஜுன் கபூரின் 38-வது பிறந்த நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் நண்பர்களுடன் மலைக்காவும் கலந்து கொண்டார். விழாவில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டு போதையில் போட்ட குத்தாட்டம் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement