விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் ராகினியின் திருமண நாளன்று கோதைக்கு அர்ஜுன் பற்றிய உண்மைகள் தெரிந்ததோடு தமிழ் மீது எந்தத் தப்பும் இல்லை என்பதும் தெரிந்து விட்டது.
இதனால் அர்ஜுனை வீட்டை விட்டு கோதை துரத்துகின்றார். இந்த நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் அர்ஜுன் கோதையின் சொத்துக்களை எல்லாம் ராகினியின் பெயருக்கு மாற்றி விட்டதாகவும் இனிமேல் இந்த சொத்திலும் கம்பனியிலும் உங்களுக்கு உரிமை இல்லை கோதையிடம் சொல்கின்றார்.
அப்போது நடேசன் அர்ஜுனை அடிக்கப்போக ராகினி திட்ட கோதை நீ எல்லாம் பொண்ணாடி சொத்து தானே உனக்கு வேணும் எல்லாத்தையும் வைத்துக் கொள் என்று சொல்லி விட்டு வீட்டை விட்டு வருகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.
Listen News!