தமிழ் திரையுலகில் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் அர்ஜுன். தனது ஆக்ஷன் காட்சிகள் மூலம் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்த இவர் தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார்.
மேலும் இவரது மகள் தான் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன். இவர் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான பட்டத்து யானை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின், Prema Baraha எனும் கன்னட படத்திலும், தனது தந்தை அர்ஜுனின் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த சொல்லிவிடவா படத்திலும் நடித்திருந்தார்.
சமீபகாலமாக திரைப்பட வாய்ப்பின்றி இருக்கும் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், அவ்வப்போது சில புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், தூம் 4 படத்தில் நடனம் ஆடியிருந்தது போல், அச்சு அசல் அப்படியே நடனம் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!